அப்பொழுது பிரதான ஆசாரியன்: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.
Then said the high priest, Are these things so?
அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள்: நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் மெசொப்பொத்தாமியாவிலிருந்தபோது, அவன் காரானூருக்கு வந்து வாசம்பண்ணுவதற்கு முன்னே, மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
And he said, Men, brethren, and fathers, hearken; The God of glory appeared unto our father Abraham, when he was in Mesopotamia, before he dwelt in Charran,
நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.
And said unto him, Get thee out of thy country, and from thy kindred, and come into the land which I shall shew thee.
அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தை விட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அங்கேயிருந்து இப்பொழுது நீங்கள் குடியிருக்கிற இந்தத் தேசத்திற்கு அவனைத் தேவன் அழைத்து வந்தார்.
Then came he out of the land of the Chaldaeans, and dwelt in Charran: and from thence, when his father was dead, he removed him into this land, wherein ye now dwell.
அவருக்கு இதில் ஒரு அடி நிலத்தையாகிலும் சுதந்தரமாகக் கொடுக்கவில்லை; அப்படியிருக்க, அவருக்குப் புள்ளியில்லாதபோது, அவருக்கும் அவருக்குப்பின் அவருடைய சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகக் கொடுப்பதாக வாக்குத்தத்தம் பண்ணினார்.
And he gave him none inheritance in it, no, not so much as to set his foot on: yet he promised that he would give it to him for a possession, and to his seed after him, when as yet he had no child.
அப்பொழுது அவர்கள் மிகுந்த சத்தமிட்டு, தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,
And said, Behold, I see the heavens opened, and the Son of man standing on the right hand of God.
அவர்களை அடிமைப்படுத்தும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டு வந்து, இந்த ஸ்தலத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றும் சொன்னார்.
And the nation to whom they shall be in bondage will I judge, said God: and after that shall they come forth, and serve me in this place.
மேலும் விருத்தசேதன உடன்படிக்கையை அவருக்குக் கட்டளையிட்டார். அந்தப்படியே அவர் ஈசாக்கைப் பெற்று, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினார். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு பன்னிரண்டு கோத்திரத் தலைவர்களைப் பெற்றான்.
And he gave him the covenant of circumcision: and so Abraham begat Isaac, and circumcised him the eighth day; and Isaac begat Jacob; and Jacob begat the twelve patriarchs.
கோத்திரத் தலைவர்கள் பொறாமைகொண்டு, யோசேப்பை எகிப்துக்கு விற்றுப்போட்டார்கள். தேவனோ அவனோடிருந்து,
And the patriarchs, moved with envy, sold Joseph into Egypt: but God was with him,
எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்துராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்து தேசத்திற்கும் தன் வீட்டுக்கனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
And delivered him out of all his afflictions, and gave him favour and wisdom in the sight of Pharaoh king of Egypt; and he made him governor over Egypt and all his house.
அக்காலத்தில் எகிப்து கானான் தேசங்களெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாயிற்று; நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்கவில்லை.
Now there came a dearth over all the land of Egypt and Chanaan, and great affliction: and our fathers found no sustenance.
எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாம் விசை அனுப்பினான்.
But when Jacob heard that there was corn in Egypt, he sent out our fathers first.
இரண்டாம் விசை யோசேப்பு தன் சகோதரரால் அறியப்பட்டான்; யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரிந்தது.
And at the second time Joseph was made known to his brethren; and Joseph's kindred was made known unto Pharaoh.
அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபையும் தன் உறவின்முறையாராகிய எழுபத்தைந்து பேரையும் வரவழைத்தான்.
Then sent Joseph, and called his father Jacob to him, and all his kindred, threescore and fifteen souls.
யாக்கோபு எகிப்துக்குப்போய், அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்தார்கள்.
So Jacob went down into Egypt, and died, he, and our fathers,
அவர்கள் சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, சீகேமின் தகப்பனாகிய எம்மோருடைய புத்திரரிடத்தில் ஆபிரகாம் கிரயத்திற்கு வாங்கியிருந்த கல்லறையிலே வைக்கப்பட்டார்கள்.
And were carried over into Sychem, and laid in the sepulchre that Abraham bought for a sum of money of the sons of Emmor the father of Sychem.
தேவன் ஆபிரகாமுக்கு ஆணையிட்ட வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் நெருங்கினபோது, ஜனங்கள் எகிப்திலே பெருகி வளர்ந்தார்கள்.
But when the time of the promise drew nigh, which God had sworn to Abraham, the people grew and multiplied in Egypt,
யோசேப்பை அறியாத வேறொரு ராஜா எழும்பும்வரைக்கும் அப்படியே இருந்தது.
Till another king arose, which knew not Joseph.
அவன் நம்முடைய வம்சத்தாரைத் தந்திரமாய் நடத்தி, நம்முடைய பிதாக்களுடைய குழந்தைகள் பிழைக்காதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடச்செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
The same dealt subtilly with our kindred, and evil entreated our fathers, so that they cast out their young children, to the end they might not live.
அக்காலத்திலே மோசே பிறந்து, தேவனுக்குப் பிரியமானவனாயிருந்தான். அவன் தன் தகப்பன் வீட்டிலே மூன்று மாதம் வளர்க்கப்பட்டான்.
In which time Moses was born, and was exceeding fair, and nourished up in his father's house three months:
பின்பு அவன் வெளியே போடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்து, தனக்குக் குமாரனாக வளர்த்தாள்.
And when he was cast out, Pharaoh's daughter took him up, and nourished him for her own son.
மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் பற்றுள்ளவனாகி, சொல்லிலும் செயலிலும் வல்லவனானான்.
And Moses was learned in all the wisdom of the Egyptians, and was mighty in words and in deeds.
அவனுக்கு நாற்பது வயது நடந்தபோது, தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரைப் பார்க்கப்போக வேண்டும் என்கிற எண்ணம் அவன் இருதயத்தில் உண்டாயிற்று.
And when he was full forty years old, it came into his heart to visit his brethren the children of Israel.
அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை அடித்துக் கொன்று, அநியாயஞ்செய்தவனுக்காகப் பழிவாங்கினான்.
And seeing one of them suffer wrong, he defended him, and avenged him that was oppressed, and smote the Egyptian:
தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைச் சகோதரர் அறிவார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.
For he supposed his brethren would have understood how that God by his hand would deliver them: but they understood not.
மறுநாளில் அவர்கள் சண்டை பண்ணிக்கொண்டிருக்கையில், அவன் அவர்களிடத்தில் வந்து: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஏன் ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறீர்கள் என்று சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றான்.
And the next day he shewed himself unto them as they strove, and would have set them at one again, saying, Sirs, ye are brethren; why do ye wrong one to another?
பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைத் தள்ளிவிட்டு: எங்களை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்?
But he that did his neighbour wrong thrust him away, saying, Who made thee a ruler and a judge over us?
நேற்று நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
Wilt thou kill me, as thou diddest the Egyptian yesterday?
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே பரதேசியாயிருந்து, அங்கே இரண்டு குமாரரைப் பெற்றான்.
Then fled Moses at this saying, and was a stranger in the land of Madian, where he begat two sons.
நாற்பது வருஷம் கடந்தபின்பு, சீனாய் மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
And when forty years were expired, there appeared to him in the wilderness of mount Sina an angel of the Lord in a flame of fire in a bush.
மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அதென்னவென்று உற்றுப்பார்க்கும்படி ஏறிப்போகையில்: நான் உன் பிதாக்களுடைய தேவன்; ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று கர்த்தருடைய சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
When Moses saw it, he wondered at the sight: and as he drew near to behold it, the voice of the Lord came unto him,
மோசே நடுக்கங்கொண்டு, உற்றுப்பார்க்கத் துணியவில்லை.
Saying, I am the God of thy fathers, the God of Abraham, and the God of Isaac, and the God of Jacob. Then Moses trembled, and durst not behold.
கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.
Then said the Lord to him, Put off thy shoes from thy feet: for the place where thou standest is holy ground.
எகிப்திலுள்ள என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் உற்றுப்பார்த்து, அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; இப்பொழுதே வா, உன்னை எகிப்துக்கு அனுப்புவேன் என்றார்.
I have seen, I have seen the affliction of my people which is in Egypt, and I have heard their groaning, and am come down to deliver them. And now come, I will send thee into Egypt.
எங்களை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயையே, தேவன் முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே அதிகாரியாகவும் மீட்பராகவும் அனுப்பினார்.
This Moses whom they refused, saying, Who made thee a ruler and a judge? the same did God send to be a ruler and a deliverer by the hand of the angel which appeared to him in the bush.
இவன் எகிப்து தேசத்திலும், சிவந்த சமுத்திரத்திலும், வனாந்தரத்திலும் நாற்பது வருஷகாலமாய் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டு வந்தான்.
He brought them out, after that he had shewed wonders and signs in the land of Egypt, and in the Red sea, and in the wilderness forty years.
உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்கு எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னவன் இந்த மோசேயே.
This is that Moses, which said unto the children of Israel, A prophet shall the Lord your God raise up unto you of your brethren, like unto me; him shall ye hear.
வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்து, சீனாய் மலையிலே தன்னுடன் பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடும் இருந்து, நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவன் இவனே.
This is he, that was in the church in the wilderness with the angel which spake to him in the mount Sina, and with our fathers: who received the lively oracles to give unto us:
இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களிலே எகிப்துக்குத் திரும்பி,
To whom our fathers would not obey, but thrust him from them, and in their hearts turned back again into Egypt,
ஆரோனை நோக்கி: எங்களுக்கு முன்னாகப் போகும் தெய்வங்களை எங்களுக்குச் செய்யும்; எங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.
Saying unto Aaron, Make us gods to go before us: for as for this Moses, which brought us out of the land of Egypt, we wot not what is become of him.
அந்நாட்களிலே அவர்கள் ஒரு கன்றுக்குட்டியைச் செய்து, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கைவேலைகளின் பலனைச் சந்தோஷமாய் அநுபவித்தார்கள்.
And they made a calf in those days, and offered sacrifice unto the idol, and rejoiced in the works of their own hands.
அப்பொழுது தேவன் அவர்கள்மேல் மனஸ்தாபப்பட்டு, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே நாற்பது வருஷகாலம் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?
Then God turned, and gave them up to worship the host of heaven; as it is written in the book of the prophets, O ye house of Israel, have ye offered to me slain beasts and sacrifices by the space of forty years in the wilderness?
நீங்கள் வழிபடத்தக்கதாகச் செய்த உருவங்களாகிய மோலோக்கின் கூடாரத்தையும் உங்கள் தெய்வமாகிய ரெம்பான் நட்சத்திரத்தையும் சுமந்தீர்களே; ஆதலால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடியேறப்பண்ணுவேன் என்று தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே.
Yea, ye took up the tabernacle of Moloch, and the star of your god Remphan, figures which ye made to worship them: and I will carry you away beyond Babylon.
மோசே பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தைச் செய்யவேண்டும் என்று அவருடனே பேசினவர் கட்டளையிட்டபடியே, அது வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களிடமிருந்தது.
Our fathers had the tabernacle of witness in the wilderness, as he had appointed, speaking unto Moses, that he should make it according to the fashion that he had seen.
அதைப் பெற்ற நம்முடைய பிதாக்கள் யோசுவாவுடனேகூட இந்தப் புறஜாதிகளுடைய தேசத்தைக் கையாளும்போது அதைக் கொண்டுவந்தார்கள். அந்தப் புறஜாதிகளைத் தேவன் நம்முடைய பிதாக்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டார். தாவீதின் நாள்வரைக்கும் அது அங்கேயிருந்தது.
Which also our fathers that came after brought in with Jesus into the possession of the Gentiles, whom God drave out before the face of our fathers, unto the days of David;
அவன் தேவனிடத்தில் கிருபைபெற்று, யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைக்கட்ட விரும்பினான்.
Who found favour before God, and desired to find a tabernacle for the God of Jacob.
சாலொமோன் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான்.
But Solomon built him an house.
ஆனாலும் உன்னதமானவர் கைகளால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணார். வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி;
Howbeit the most High dwelleth not in temples made with hands; as saith the prophet,
எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட ஆலயத்தைக் கட்டுவீர்கள்? நான் இளைப்பாறும் ஸ்தலம் எது? என்னுடைய கரமல்லவோ இவைகளையெல்லாம் உண்டாக்கிற்று என்று தீர்க்கதரிசி சொல்லுகிறாரே.
Heaven is my throne, and earth is my footstool: what house will ye build me? saith the Lord: or what is the place of my rest?
வணங்காத கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவியிலும் விருத்தசேதனமில்லாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் எப்பொழுதும் பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கிறீர்கள்.
Hath not my hand made all these things?
தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிமானுடைய வருகையை முன்னறிவித்தவர்களை அவர்கள் கொன்றுபோட்டார்கள்; இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்தவர்களுமானீர்கள்.
Ye stiffnecked and uncircumcised in heart and ears, ye do always resist the Holy Ghost: as your fathers did, so do ye.
தேவதூதர்களைக் கொண்டு கட்டளையிடப்பட்ட நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதை நீங்கள் கைக்கொள்ளவில்லை என்றான்.
Which of the prophets have not your fathers persecuted? and they have slain them which shewed before of the coming of the Just One; of whom ye have been now the betrayers and murderers:
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்தில் குத்தப்பட்டு, அவனைப் பார்த்துப் பற்களைக் கடித்தார்கள்.
Who have received the law by the disposition of angels, and have not kept it.
அவன் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும் தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு:
When they heard these things, they were cut to the heart, and they gnashed on him with their teeth.
இதோ, வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
But he, being full of the Holy Ghost, looked up stedfastly into heaven, and saw the glory of God, and Jesus standing on the right hand of God,
அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
And said, Behold, I see the heavens opened, and the Son of man standing on the right hand of God.
பட்டணத்திற்குப் புறம்பே அவனைத் தள்ளி, கல்லெறிந்தார்கள். சாட்சிகளானவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னும் பெயருள்ள ஒரு வாலிபனுடைய பாதத்தருகே வைத்தார்கள்.
Then they cried out with a loud voice, and stopped their ears, and ran upon him with one accord,
அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
And cast him out of the city, and stoned him: and the witnesses laid down their clothes at a young man's feet, whose name was Saul.
அவன் முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி நித்திரை அடைந்தான். சவுலும் அவன் கொலைசெய்யப்படுவதற்குச் சம்மதித்திருந்தான்.
And they stoned Stephen, calling upon God, and saying, Lord Jesus, receive my spirit.
சவுலும் அவன் கொலைசெய்யப்படுவதற்குச் சம்மதித்திருந்தான். அந்நாட்களில் எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த உபத்திரவம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்கள் தவிர மற்றவர்களெல்லாரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறிப்போனார்கள்.
And he kneeled down, and cried with a loud voice, Lord, lay not this sin to their charge. And when he had said this, he fell asleep.