மோசே எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை விவாகம்பண்ணியிருந்தபடியால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:
Then Miriam and Aaron spoke against Moses because of the Ethiopian woman whom he had married; for he had married an Ethiopian woman.
கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ? எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.
So they said, “Has the Lord indeed spoken only through Moses? Has He not spoken through us also?” And the Lord heard it.
மோசே என்பவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
(Now the man Moses was very humble, more than all men who were on the face of the earth.)
சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்றுபேரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குப் புறப்பட்டுவாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.
Suddenly the Lord said to Moses, Aaron, and Miriam, “Come out, you three, to the tabernacle of meeting!” So the three came out.
கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் வந்தார்கள்.
Then the Lord came down in the pillar of cloud and stood in the door of the tabernacle, and called Aaron and Miriam. And they both went forward.
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.
Then He said, “Hear now My words: If there is a prophet among you, I, the Lord, make Myself known to him in a vision; I speak to him in a dream.
என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீடெங்கும் அவன் உண்மையுள்ளவன்.
Not so with My servant Moses; He is faithful in all My house.
நான் அவனோடே மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.
I speak with him face to face, Even plainly, and not in dark sayings; And he sees the form of the Lord. Why then were you not afraid To speak against My servant Moses?”
கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.
So the anger of the Lord was aroused against them, and He departed.
மேகமும் கூடாரத்தைவிட்டு நீங்கிற்று; மிரியாம் உறைந்த மழையைப்போல வெண்மையான குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமின்மேல் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக்கண்டான்.
And when the cloud departed from above the tabernacle, suddenly Miriam became leprous, as white as snow. Then Aaron turned toward Miriam, and there she was, a leper.
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.
So Aaron said to Moses, “Oh, my lord! Please do not lay this sin on us, in which we have done foolishly and in which we have sinned.
தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான்.
Please do not let her be as one dead, whose flesh is half consumed when he comes out of his mother’s womb!”
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
So Moses cried out to the Lord, saying, “Please heal her, O God, I pray!”
கர்த்தர் மோசேயை நோக்கி: அவளுடைய தகப்பன் அவள் முகத்திலே காறி உமிழ்ந்ததுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ? அதுபோல அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.
Then the Lord said to Moses, “If her father had but spit in her face, would she not be shamed seven days? Let her be shut out of the camp seven days, and afterward she may be received again.”
அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமளவும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.
So Miriam was shut out of the camp seven days, and the people did not journey till Miriam was brought in again.
பின்பு ஜனங்கள் ஆஸரோத்தைவிட்டுப் புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
And afterward the people moved from Hazeroth and camped in the Wilderness of Paran.