1

சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது:

Now these are the records of Aaron and Moses when the Lord spoke with Moses on Mount Sinai.

2

ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.

And these are the names of the sons of Aaron: Nadab, the firstborn, and Abihu, Eleazar, and Ithamar.

3

ஆசாரிய ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே.

These are the names of the sons of Aaron, the anointed priests, whom he consecrated to minister as priests.

4

நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

Nadab and Abihu had died before the Lord when they offered profane fire before the Lord in the Wilderness of Sinai; and they had no children. So Eleazar and Ithamar ministered as priests in the presence of Aaron their father.

5

கர்த்தர் மோசேயை நோக்கி:

And the Lord spoke to Moses, saying:

6

நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடைசெய்யும்படி அவர்களை நிறுத்து.

“Bring the tribe of Levi near, and present them before Aaron the priest, that they may serve him.

7

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யக்கடவர்கள்.

And they shall attend to his needs and the needs of the whole congregation before the tabernacle of meeting, to do the work of the tabernacle.

8

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள்.

Also they shall attend to all the furnishings of the tabernacle of meeting, and to the needs of the children of Israel, to do the work of the tabernacle.

9

ஆகையால் லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

And you shall give the Levites to Aaron and his sons; they are given entirely to him from among the children of Israel.

10

ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.

So you shall appoint Aaron and his sons, and they shall attend to their priesthood; but the outsider who comes near shall be put to death.”

11

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

Then the Lord spoke to Moses, saying:

12

இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.

“Now behold, I Myself have taken the Levites from among the children of Israel instead of every firstborn who opens the womb among the children of Israel. Therefore the Levites shall be Mine,

13

முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன்மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.

because all the firstborn are Mine. On the day that I struck all the firstborn in the land of Egypt, I sanctified to Myself all the firstborn in Israel, both man and beast. They shall be Mine: I am the Lord.”

14

பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:

Then the Lord spoke to Moses in the Wilderness of Sinai, saying:

15

லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.

“Number the children of Levi by their fathers’ houses, by their families; you shall number every male from a month old and above.”

16

அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப்பட்ட பிரகாரம் அவர்களை எண்ணினான்.

So Moses numbered them according to the word of the Lord, as he was commanded.

17

லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

These were the sons of Levi by their names: Gershon, Kohath, and Merari.

18

தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.

And these are the names of the sons of Gershon by their families: Libni and Shimei.

19

தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.

And the sons of Kohath by their families: Amram, Izehar, Hebron, and Uzziel.

20

தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.

And the sons of Merari by their families: Mahli and Mushi. These are the families of the Levites by their fathers’ houses.

21

கெர்சோனின் வழியாய் லிப்னீயரின் வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.

From Gershon came the family of the Libnites and the family of the Shimites; these were the families of the Gershonites.

22

அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராயிருந்தார்கள்.

Those who were numbered, according to the number of all the males from a month old and above—of those who were numbered there were seven thousand five hundred.

23

கெர்சோனியரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்கவேண்டும்.

The families of the Gershonites were to camp behind the tabernacle westward.

24

கெர்சோனியருடைய தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் லாயேலின் குமாரனாகிய எலியாசாப் என்பவன்.

And the leader of the father’s house of the Gershonites was Eliasaph the son of Lael.

25

ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் புத்திரரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவும்,

The duties of the children of Gershon in the tabernacle of meeting included the tabernacle, the tent with its covering, the screen for the door of the tabernacle of meeting,

26

வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.

the screen for the door of the court, the hangings of the court which are around the tabernacle and the altar, and their cords, according to all the work relating to them.

27

கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.

From Kohath came the family of the Amramites, the family of the Izharites, the family of the Hebronites, and the family of the Uzzielites; these were the families of the Kohathites.

28

ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.

According to the number of all the males, from a month old and above, there were eight thousand six hundred keeping charge of the sanctuary.

29

கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.

The families of the children of Kohath were to camp on the south side of the tabernacle.

30

அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.

And the leader of the fathers’ house of the families of the Kohathites was Elizaphan the son of Uzziel.

31

அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.

Their duty included the ark, the table, the lampstand, the altars, the utensils of the sanctuary with which they ministered, the screen, and all the work relating to them.

32

ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.

And Eleazar the son of Aaron the priest was to be chief over the leaders of the Levites, with oversight of those who kept charge of the sanctuary.

33

மெராரியின் வழியாய் மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.

From Merari came the family of the Mahlites and the family of the Mushites; these were the families of Merari.

34

அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள்.

And those who were numbered, according to the number of all the males from a month old and above, were six thousand two hundred.

35

அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும்.

The leader of the fathers’ house of the families of Merari was Zuriel the son of Abihail. These were to camp on the north side of the tabernacle.

36

அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,

And the appointed duty of the children of Merari included the boards of the tabernacle, its bars, its pillars, its sockets, its utensils, all the work relating to them,

37

சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே.

and the pillars of the court all around, with their sockets, their pegs, and their cords.

38

ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்.

Moreover those who were to camp before the tabernacle on the east, before the tabernacle of meeting, were Moses, Aaron, and his sons, keeping charge of the sanctuary, to meet the needs of the children of Israel; but the outsider who came near was to be put to death.

39

மோசேயும், ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்.

All who were numbered of the Levites, whom Moses and Aaron numbered at the commandment of the Lord, by their families, all the males from a month old and above, were twenty22,000two thousand.

40

அதன்பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரில் ஒருமாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி,

Then the Lord said to Moses: “Number all the firstborn males of the children of Israel from a month old and above, and take the number of their names.

41

இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.

And you shall take the Levites for Me—I am the Lord—instead of all the firstborn among the children of Israel, and the livestock of the Levites instead of all the firstborn among the livestock of the children of Israel.”

42

அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.

So Moses numbered all the firstborn among the children of Israel, as the Lord commanded him.

43

ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்று பேராயிருந்தார்கள்.

And all the firstborn males, according to the number of names from a month old and above, of those who were numbered of them, were twenty22,273two thousand two hundred and seventy-three.

44

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

Then the Lord spoke to Moses, saying:

45

நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர்.

“Take the Levites instead of all the firstborn among the children of Israel, and the livestock of the Levites instead of their livestock. The Levites shall be Mine: I am the Lord.

46

இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,

And for the redemption of the two hundred and seventy-three of the firstborn of the children of Israel, who are more than the number of the Levites,

47

நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.

you shall take five shekels for each one individually; you shall take them in the currency of the shekel of the sanctuary, the shekel of twenty gerahs.

48

லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.

And you shall give the money, with which the excess number of them is redeemed, to Aaron and his sons.”

49

அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,

So Moses took the redemption money from those who were over and above those who were redeemed by the Levites.

50

ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,

From the firstborn of the children of Israel he took the money, one thousand three hundred and sixty-five shekels, according to the shekel of the sanctuary.

51

கர்த்தருடைய வாக்கின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.

And Moses gave their redemption money to Aaron and his sons, according to the word of the Lord, as the Lord commanded Moses.