1

ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் வீணானதைச் சிந்திப்பானேன்?

Why do the heathen rage, and the people imagine a vain thing?

2

கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

The kings of the earth set themselves, and the rulers take counsel together, against the LORD, and against his anointed, saying,

3

அவர்களுடைய கட்டுகளை அறுத்து, அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

Let us break their bands asunder, and cast away their cords from us.

4

பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

He that sitteth in the heavens shall laugh: the Lord shall have them in derision.

5

அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணி:

Then shall he speak unto them in his wrath, and vex them in his sore displeasure.

6

நான் என்னுடைய ராஜாவை என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மேல் முடிசூட்டி வைத்தேன் என்பார்.

Yet have I set my king upon my holy hill of Zion.

7

தீர்மானத்தின் விவரம் அறிவிப்பேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்;

I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.

8

என்னிடம் கேள், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

Ask of me, and I shall give thee the heathen for thine inheritance, and the uttermost parts of the earth for thy possession.

9

இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

Thou shalt break them with a rod of iron; thou shalt dash them in pieces like a potter's vessel.

10

இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள்; பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.

Be wise now therefore, O ye kings: be instructed, ye judges of the earth.

11

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

Serve the LORD with fear, and rejoice with trembling.

12

குமாரன் கோபங்கொள்ளாமலிருக்கவும், வழியிலே நீங்கள் அழியாமலிருக்கவும், அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றி எரியும்; அவரை நம்புகிற யாவரும் பாக்கியவான்கள்.

Kiss the Son, lest he be angry, and ye perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all they that put their trust in him.