1

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகிறபோது எனக்குப் பதில் கொடுத்தருளும்; நெருக்கத்தில் எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.

Hear me when I call, O God of my righteousness: thou hast enlarged me when I was in distress; have mercy upon me, and hear my prayer.

2

மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்துவீர்கள்? எதுவரைக்கும் வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள்? (சேலா.)

O ye sons of men, how long will ye turn my glory into shame? how long will ye love vanity, and seek after leasing? Selah.

3

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறபோது அவர் கேட்டருளுவார்.

But know that the LORD hath set apart him that is godly for himself: the LORD will hear when I call unto him.

4

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் தியானித்து அமர்ந்திருங்கள். (சேலா.)

Stand in awe, and sin not: commune with your own heart upon your bed, and be still. Selah.

5

நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.

Offer the sacrifices of righteousness, and put your trust in the LORD.

6

எங்களுக்கு நன்மையைக் காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.

There be many that say, Who will shew us any good? LORD, lift thou up the light of thy countenance upon us.

7

அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருந்த காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.

Thou hast put gladness in my heart, more than in the time that their corn and their wine increased.

8

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய் தங்கப்பண்ணுகிறீர்.

I will both lay me down in peace, and sleep: for thou, LORD, only makest me dwell in safety.