← Song Lyrics

நான் பார்த்த அழக்கெல்லாம்

Aaron Bala
Tamil
எங்கள் ஆயுள் முழுக்க அழகானீரே எங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றின தெய்வம் நீரே -2 - எங்கள் ஆயுள் நான் பார்த்த அழக்கெல்லாம் உம் முன்பு தோற்றதே நான் கண்ட பாசமெல்லாம் வேஷமாகி போனதே -2 பொய்யான அன்பை நம்பி மெய் அன்பு உம்மை மறந்தேன் மாய்மால வார்த்தை நம்பி உம் வார்த்தை கேட்க மறந்தேன்-2 புத்தியும் தெளிந்து விட்டதே உம் பாசம் புரிந்து விட்டதே அப்பா உம் சமூகத்துக்கு பயந்து பயந்து நானும் வந்தேன் அப்பான்னு கூப்பிடவே தயங்கி தயங்கி நானும் நின்றேன் -2 எங்கள் ஆயுள் முழுக்க நீர் போதுமே எங்கள் வாழ்நாள் முழுவதும் நீர் வேண்டுமே -2 என்னுடன் பேச துடிக்கும் உம்மிடம் பேச மறுத்தேன் என்னிடம் பேச மறுக்கும் மனித அன்பை தேடி அலைந்தேன் -2 உம் அன்பை புரிந்து கொண்டேன் உம்மிடம் ஓடி வந்தேன் இனிமேல் நான் உம்மை விட்டு ஓட மாட்டேன் இயேசப்பா நீர் இல்லாமல் வாழ மாட்டேன் -2 என் ஆயுள் முழுக்க ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம் ஆராதிப்பேன் -2

Romanised lyrics aren't available for this song yet.

Chords aren't available for this song yet.

Title நான் பார்த்த அழக்கெல்லாம்
Artist Aaron Bala
Language Tamil
Added Aug 17, 2026