← Song Lyrics

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா அர்ப்பணித்தேன் ( நான் ) அர்ப்பணித்தேன் ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் - என் அ 1 . உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா - ஒரு 2 . உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா 3 . வாக்குவாதம் பொறாமை ( பொறாமைகள் ) தூக்கி எறிந்தேன் நான் ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான் 4 . உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா
Appa Ennai Muluvathum Arppaniththaen Aiyaa Uyirotirukkum Naalellaam Umakkuch Sonthamaiyaa Arppaniththaen (Naan) Arppaniththaen Aavi Aathumaa Sareeram Arppanithaen 1. Ullam Udal Ellaamae Umakkuth Thanthaenaiyaa Kallam Kapadu Illaamal Kaaththuk Kollumaiyaa 2. Ulakapperumai Sittinpam Utharivittaenaiyaa Kasappu Veruppu Kaayangal Kadanthu Ponathaiyaa 3. Vaakkuvaatham Poraamaikal Thookki Erinthaen Naan Aandavar Yesuvai Aataiyaay Anninthu Kontaen Naan 4. Umakkaay Vaalum Vairaakkiyam Ullaththil Vanthathaiyaa Enakkaay Vaalum Ennangal Ento Matinthathaiyaa

Chords aren't available for this song yet.

Title அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026