← Song Lyrics

அப்பா பிதாவே அன்பான தேவா

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே 1 . எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி - அப்பா 2 . தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி 3 . உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே 4 . இரவும் பகலும் ஐயா கூட இருந்து எப்போதும் ( எந்நாளும் ) காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே 5 . ஒன்றை நான் கேட்டேன் - அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்பணி செய்திடுவேன்
Appaa Pithaave Anbaana Devaa Arumai Ratchakare Aaviyaanavare – 2 1. Engo Naan Vaazhnthen Ariyaamal Alainthen En Nesar Thedi Vantheer – 2 Nenjaara Anaiththu Muththangal Koduththu Nizhalaai Maarivitteer – 2 Nandri Umakku Nandri – Aiyaa (2) (… Appaa) 2. Thaazhmaiyil Irunthen Thallaadi Nadanthen Thayavaay Ninaivu Koorntheer – 2 Kalangaathe Endru Kanneerai Thudaiththu Karampattri Nadaththukireer – 2 (… Nandri) 3. Ulaiyaana Settril Vaazhntha Ennai Thookki Eduththeere – 2 Kalvaari Raththam Enakkaaka Sinthi Kazhuvi Anaiththeere – 2 (… Nandri) 4. Iravum Pakalum Aiyaa Kooda Irunthu Eppothum (Ennaalum) Kaappavare – 2 Maravaatha Dheyvam Maaraatha Nesar Makimaikku Paaththirare – 2 (… Nandri) 5. Ondrai Naan Ketten Athaiye Naan Thedi Aarvamaai Naadukiren – 2 Uyirodu Vaazhum Naatkalellaam Um Pani Seithiduven – 2 (… Nandri)

Chords aren't available for this song yet.

Title அப்பா பிதாவே அன்பான தேவா
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026