← Song Lyrics

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை எழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் 1 . யோசுவாவின் சந்ததி நாமே தேசத்தைச் சுதந்தரிப்போமே உடன்படிக்கை பெட்டி நம்மோடு ஊர் ஊராய் வலம் வருவோமே - துதிப்போம் 2 . கால் மிதிக்கும் எவ்விடத்தையும் கர்த்தர் தந்திடுவாரே எதிர்த்து நிற்க எவராலுமே முடியாதென்று வாக்குரைத்தாரே 3 . மோசேயோடு இருந்ததுபோல சேனைகளின் கர்த்தர் நம்மோடு தளபதியாய் முன் செல்கிறார் தளர்ந்திடாமல் பின் தொடர்வோம் 4 . அச்சமின்றி துணிந்து செல்வோமே அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே கர்த்தர் வார்த்தை நம் வாயிலே நிச்சயமாய் வெற்றி பெறுவோம் 5 . தேசத்து எதிரிகளெல்லாம் திகில் பிடித்து நடுங்குகின்றனர் கர்த்தர் செய்யும் அற்புதங்களை கேள்விப்பட்டு கலங்குகின்றனர் 6 . செங்கடலை வற்றச் செய்தவர் சீக்கிரத்தில் வெற்றி தருவார் யோர்தானை நிற்கச் செய்தவர் - நம் பாரதத்தை ஆளுகை செய்வார்
Vilukuthu Vilukuthu Eriko Kottai Elumputhu Elumputhu Yesuvin Patai Thuthippom Saaththaanai Jeyippom Thuthippom Thaesaththaich Sonthamaakkuvom 1. Yosuvaavin Santhathi Naamae Thaesaththaich Suthantharippomae Udanpatikkai Petti Nammodu Oor Ooraay Valam Varuvomae - Thuthippom 2. Kaal Mithikkum Evvidaththaiyum Karththar Thanthiduvaarae Ethirththu Nirka Evaraalumae Mutiyaathentu Vaakkuraiththaarae 3. Moseyodu Irunthathupola Senaikalin Karththar Nammodu Thalapathiyaay Mun Selkiraar Thalarnthidaamal Pin Thodarvaem 4. Achchaminti Thunninthu Selvomae Arikkai Seythu Aarpparippomae Karththar Vaarththai Nam Vaayilae Nichchayamaay Vetti Peruvom 5. Thaesaththu Ethirikalellaam Thikil Pitiththu Nadungukintanar Karththar Seyyum Arputhangalai Kaelvippattu Kalangukintanar 6. Sengadalai Vattach Seythavar Seekkiraththil Vetti Tharuvaar Yorthaanai Nirkach Seythavar - Nam Paarathaththai Aalukai Seyvaar

Chords aren't available for this song yet.

Title விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Aug 21, 2026